தீக்குச்சி, பெட்ரோல் முதல் அணைத்து எரிபொருளும் எரிய தேவைபடுவது ஆக்சிஜன் இது நமக்கு காற்றில் இலவசமாக கிடைக்கிறது அதனால் நாம் அதை ஒருபொருட்டாக நினைப்பதில்லை. நமது காருக்கு போடுகிற பெட்ரோலை கூட கார்புரடோர் மூலமாக ஆக்சிஜன் கலந்து தான் எரிக்கிறோம் இப்பொழுது கதைக்கு போவோம்.
விண்வெளியில் செலுத்தும் ராகேட்களுக்கு அது பாயும் வேகத்திற்கு ஏற்ப காற்றில் இருந்து ஆக்சிஜனை ராக்கெட் எரிபொருளுடன் கலந்து எரிக்கும் தொழில்நுட்பம் நமது நாட்டில் இல்லாமல் இருந்தது. எனவே திரவமாக்கபட்ட ஆக்சிஜனை ராக்கெட் எரிபொருளுடன் கலந்து தான் ராக்கெட் செலுத்தப்பட்டு வந்தது. வெளியில் இருந்து ஆக்சிஜன் கிடைக்காததால் இந்த திரவ ஆக்சிஜனை ராக்கெட் பயன்படுத்தி கொள்ளும்.
இதனால் ராகெட்டின் எடை கூடும் இந்த திரவ ஆக்சிஜனுக்கு பதிலாக காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுக்கும் தொழில்நுட்பத்திற்கு பெயர்தான் ஸ்க்ரம்ஜெட் எனப்படுகிறது. இது ராக்கெட்டின் எரிபொருள் எடையை குறைத்து ராக்கெட் சுமந்து செல்லும் பலனுள்ள பொருளின் (செயற்கைக்கோள், குண்டு) எடையை கூட்டுகிறது அதுபோக ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் செல்லும் ராகேட்டிர்க்கு அதே வேகவிகிதத்தில் ஆக்சிஜனை எடுத்து கொடுக்கும் இந்த எஞ்சின்.
இது வானத்தில் இருந்து குதித்த தொழில்நுட்பம் அல்ல வேதங்களில் இருந்து சமஸ்க்ரிதம் படித்து தெரிந்துகொண்டது அல்ல, நமது பிள்ளைகளின் கடின உழைப்பாலும் உயர் கல்வி நிறுவனங்களாலும், அரசு உதவிபெற்ற ஆரய்ச்சி படிப்புகளாலும் தான் இது சாத்தியப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் வின்ஜாநிகளை பாராட்டுவோம். அறிவியல் மனநிலை வேண்டும் என்பதை சட்டமாக்கிய அம்பேத்காரையும், உயர் கல்வி நிறுவனங்களை நிறுவி இந்தியாவை ஒரு அறிவியல் தேசமாக மாற்ற உழைத்த நேருவையும் நன்றியோடு நினைதுபார்போம்.
நேருவிடம் திராவிட இயக்குதுகாரனாகிய நான் கொண்ட மாறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு அவரின் சாதனையான இஸ்ரோ நம்மை மேலும் ஒரு படி அறிவியலில் கொண்டு சென்றுள்ளது எனபது மிகையல்ல.
இந்த தொழில் நுட்பத்தை பெற்ற மூன்றாவது நாடு நாம். ஜப்பான் சீனா பிரான்ச ரஷ்யாவில் இந்த தொழில்நுட்பம் இல்லை.
நேரு நமக்கு சிறுநீர் குடிக்க கற்று தரவில்லை, கல்வியை கொடுத்து விண்வெளிக்கு செல்ல வழி ஏற்படுத்தினார் என்பதை அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் உணரட்டும்.
நேரு நமக்கு சிறுநீர் குடிக்க கற்று தரவில்லை, கல்வியை கொடுத்து விண்வெளிக்கு செல்ல வழி ஏற்படுத்தினார் என்பதை அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் உணரட்டும்.
Comments
Post a Comment