Skip to main content

இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க

இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை?
நம்பிக்கையை காயப்படுத்தலாமா?
பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவிலுக்கு போறாங்க! அதை உங்களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா?
நாத்திகம் பேசுறவங்க இந்து மதத் தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ் லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?
உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயில்ல யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தால் உங்களுக்கு என்ன? கோவில் நுழைவுப் போராட் டத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் என்ன ?
நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பாக்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க!
அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ? -
இப்படிப்பட்ட கேள்விகளை சாதா ரண பாமரன் கேட்டால் பரவாயில்லை; அறியாமை என விளக்கலாம் . ஆனால் இது போன்ற குதர்க்கமான கேள்வி களை மெத்தப் படித்தவர்கள் முக நூலிலும் இணையதளத்திலும் குயுக்தி யாகக் கேட்கும் போது சற்று வேதனை யாக இருப்பினும் அறிவியல் ரீதியாக நாம் பயணம் செய்யவேண்டியது நெடுந்தூரம் எனப் புரிகிறது . மறுபக்கம் இந்தக்கேள்விகளுக்கு நாம் பொறுமை மயாகப் பதில் சொல்லியாக வேண்டும் . வேறு வழியில்லை .
பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவி லுக்கு போறாங்க! அதை உங் களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா?
இந்த வாதமே தனிமனித உரி மையைக் கிள்ளுக்கீரையாக் கருதும் ஆதிக்க கண்ணோட்டமாகும் . என் அப்பா அம்மா பெரும் பக்திமான்கள். ஆனால் நான் பகுத்தறிவாளன். கம் யூனிஸ்ட். பெற்றோரை மதிப்பது வேறு; எனது சுயசிந்தனையும் தேடலும் என் உரிமை. அதை நான் விட்டுக் கொடுக்க வில்லை. என் பிள்ளைகளுக்கும் அவர்கள் பாதையை தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு. மனைவி கணவனை நேசிப்பது வேறு; தன் சுயத்தை இழந்து கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ கண்மூடி பின்பற்றத் தேவை இல்லை . அவர்களுக்கு சுயசிந் தனை, சுய உரிமை எல்லாம் உண்டு. வேடிக்கை என்ன தெரியுமா முற் போக்காளர்கள் மனைவியின் சுய சிந்தனையை சுய உரிமையை மதிக் கிறார்கள். ஆனால் மதம் பெண்களுக்கு சுயம் இல்லை என மறுக்கிறது. மத நம்பிக்கையாளர்களும் பெண்களின் சுயத்தை சுயசிந்தனையை சுய உரிமையை ஏற்கமறுப்பதன் எதி ரொலியே மேலே உள்ள கேள்வி. ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கை யுள்ளோராகவோ அறிவியல் பாதையில் நடப்போராகவோ இருக்க முழு உரிமை படைத்தவர்கள். யார் மீதும் யாரும் எதையும் திணிப்பவராக இருக்க முடியாது. திணிப்புக்கு தலைவணங்குப வராகவும் இருக்கக்கூடாது .
குடும்பத்தாரையும் தன் லட்சியப் பயணத்தில் இணைக்க எடுத்துரைக் கலாம். பயிற்றுவிக்கலாம். ஆனால், ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே நேரம் யாரும் பிறருக்காக தன் கொள்கையில் சமரசம் செய்யவும் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை நாட்டுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் தேவை.
நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை?
ஐரோப்பாவில் எழுதப்படுகிற பகுத்தறிவு நூல்களாகட்டும் இதர நூல்களாகட்டும் அவை இந்து மதத்தைத் தொடுவதில்லை. இங்கர்சால் எழுதிய நூல்களைப் பாருங்கள் கிறித்துவ மதமே விமர்சனத்துக்குள் ளாகி இருக்கும். சமீபத்தில் இணையத் தில் உலாவந்த போது அகப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் அந்தந்த நாட் டில் பெரும்பான்மையோரின் மத நம்பிக்கை சார்ந்தே கேள்வி எழுப்பி யுள்ளன.
இதுவே இஸ்லாமிய நாடு களிலும் உள்ள நிலை. வலைத் தளத் தில் தேடினால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நாத்திகர் படையைக் காணலாம். பெரும்பாலும் அங்கெல் லாம் இந்து புராணங்கள் சார்ந்து அல்ல அந்தந்த நாட்டின் புராணங் களே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதைக் காணலாம். அவர்கள் பட்டியல் தருவ தானால் ஏராளம் பக்கங்கள் தேவை.
போய்த் தேடுங்கள் உண்மை அறிய லாம். இங்கேயும் டாக்டர் கோவூர் எழுதிய நூல்களில் கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கைகள் கேள்விக்குள் ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் காரணம் அவர் கிறித்துவச் சூழலில் பிறந்தவர். பெரியார் பெரிதும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்கினார். அவர் பிறந்த சூழல் அப்படி அதே சமயம் இங்கர்சாலின் நான் ஏன் கிறித்துவனல்ல என்ற நூலையும் மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன்?, நூலையும் மொழிபெயர்த்து அச்சிடச்செய்தவர் அவரே.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எல்லா மதத்தினரின் மூடநம்பிக்கை களையும் கேள்விக்குள்ளாக்கினார். ஒருவர் அவர் பிறந்த மதச்சூழல் பிறப் பால் அவர் மீது திணிக்கப்பட்ட மதம் இவற்றையே நன்கு அறிவார் ; எனவே அது சார்ந்து பேசுவதே இயல்பு. மாறாக பிற மதத்தை விமர்சிக்கப்புகின் தேவையற்ற மதமோதலுக்கு வழி கோலிவிடக் கூடுமல்லவா?
உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன? எந்த மொழியில அர்ச்சனை செய்தா உங்களுக் கென்ன? கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
இது மதநம்பிக்கை சார்ந்த பிரச் சனை அல்ல . மனித உரிமை சார்ந்த பிரச்சனை . சமத்துவம் சார்ந்த பிரச் சனை. நாம் அவர்களைப் பார்த்து கேட்க ஆசைப்படும் கேள்வி இதுவே , கடவுளை நீயும் நம்புகிறாய் ; அவனும் நம்புகிறான் . அப்படியிருக்க உனக்கு மட்டுமே பூஜை செய்ய உரிமையும் பாத்தியதையும் உண்டு அவனுக்கு இல்லை என்பது என்ன நியாயம்? கடவுள் எல்லொருக்கும் பொது என்பது பொய்யா? ஒரு சாராருக்கு மட்டுமே உரியவரென்றால் அவர் எப்படிக் கடவுளாவார் ? உமது நம்பிக் கைப்படி கடவுள்தாம் உலகத்தைப் படைத்தார் எனில் அவர் ஒரு சாராரை மட்டும் படைத்தாரா எல் லோரையும் படைத்தாரா? கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா?
உண் மையில் நாத்திகரைவிட கடவுளை அதிகம் கேவலப்படுத்துகிறவர் யார்? இப்படி பிறர் உரிமையை மறுப்ப வரல்லவா? உங்களுக்கேன் அக்கறை என முற்போக்காளரை நோக்கி கேட்பவரே, உரிமை எல்லோருக்குமானது . அதனை ஒருசாராருக்கு மறுக்கும் போது எதிர்த்துக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .அடுத்தவீட்டுக்காரன் மனைவியை தூக்கிப் போட்டு அடிக்கும் போதோ மிதிக்கும் போதோ தலையிட்டுக் கேட்பதில்லையா? எரிவது என் வீடல்ல என சும்மா இருப்பது அறமா?
உரிமை மிதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பது சமூகநியாயமே!
நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பார்க்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துவிட்டதே! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக் கோங்க!
பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தது சரியா, தவறா ? இது நீண்ட நாட்களாக நடக்கும் விவாதம். அவர் காலத்தில் புரையோடிப்போன சமூ கத்தை சீர்திருத்த சில அதிரடி நடவடிக்கைகள் அவருக்குத் தேவைப் பட்டது. சுயநலத்துக்காகவோ, கலவ ரத்தைத் தூண்டி பதவி நாற்காலியை பிடிப்பதற்காகவோ எந்த வழிபாட்டு தலத்தையும் அவர் இடிக்கவில்லை. அவர் பிள்ளையார் சிலை உடைத்த தால் இன்று மூலைக்கு மூலை பிள்ளை யார் சிலை வரவில்லை; மாறாக பிள் ளையார் சதுர்த்தி ஒரு மதவெறி அரசியல் செயல்பாடாக மாற்றப் பட்டதன் பின்னணியில்தான் பிள்ளை யார் சிலை பெருக்கம் என்பதறிக! மனித வரலாற்றில் மதம் எப்போது வந்தது? கடவுள் எப்போது வந்தது? இன்னும் பல கடவுள்கள் பல மதங்கள் என பிரிந்து மோதுவது ஏன்? இந்தக் கேள்விகளை எழுப்பி விடைதேட முயன்றால் அதற்கான விடை சமூக அறிவியலில்தான் கிடைக்கும். அம்மை நோய்க்கும் பிளேக் நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட கடவுள் தான் காரணம் என எத்தனை நூற் றாண்டுகளாக மனிதகுலம் நம்பி வந்தது. அந்நோய் ஒழிக்கப்பட்டது சுமார் இருநூறாண்டுகளுக்குள்தானே! அதுபோல் அறிவியல் உண்மைகளை சமூகம் ஏற்க பல்லாண்டாகலாம். எவ்வளவு காலம் என்பது முக்கிய மில்லை.
எவ்வளவு பேர் ஏற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. இது விழிப் புணர்வுக்கான தொடர் போராட்டமே! மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதற்கு அறியாமை ஒரு காரணமெனில் சமூகச்சூழல் இன்னொரு காரணம். அறிவியல் ஒளி பரவப் பரவ அறியாமை பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடியிருக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
இதனால் மக்கள் இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்கள் என வறட்டு நாத்திகவாதிகள்போல் கூறலாமோ. கூடாது. காரணம் சமூக ஏற்ற தாழ்வும் வறுமையும் கையறு நிலையும் மக்களை மேலும் மேலும் கடவுள் நம்பிக்கையின் பக்கம் தள்ளுகின்றன. ஆகவேதான் மதம் அபின் என்று சொன்ன மார்க்ஸ் அது இதயமற்றவர்களின் இதயமாக ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது என்கிற உண்மையையும் சுட்டிக்காட்டினார். ஆக, சமூக ஏற்ற தாழ்வுக்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்று படுத்துவதன் மூலமே அவர்களை சரியான பாதைக்குத் திருப்ப முடியும். வெறும் போராட்டம் மட்டுமே சாதித் துவிடாது. இடைவிடாது தத்துவமும் அறிவியல் போதனையும் இணையும் போதுதான் நீடித்த பலன் கிட்டும் .
அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதைப் புண் படுத்தலாமா ?
எதையும் மனதைக் காயப்படுத்தி திணிக்க முடியாது. காயப்படுத்துவதும் கூடாது; ஆயின் காயப்படுத்துவது என்பதென்ன? உண்மையைச் சொல் வதும்; அறிவியலாய் கேள்வி எழுப்பு வதும் காயப்படுத்துவதாகுமா ? ஒரு காலத்தில் நரபலி மத நம்பிக்கையாக இருந்தது. அதை எதிர்த்து முறியடிக் காமல் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டிருக்க முடியுமா? அன்று நர பலியை கேள்வி கேட்ட போது மத நம்பிக்கையில் தலையிடுவதாகத்தானே கூச்சல் போட்டார்கள்.
தங்கள் உள்ளம் காயப்பட்டிருப்பதாக கூறினார்கள். உடன்கட்டை ஏறுவது மத நம் பிக்கையாக இருந்தது; அதனை எதிர்த்தபோது மதவாதிகள் தங்கள் மதத்தில் தலையிடுவதாகக் கூச்சல் போட்டனர். ஆயினும் விடாது போரா டியதால்தானே அக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது. இன்னும் சதிமாதா கி ஜே என்போரை விமர்சனம் செய் வது எப்படிக் காயப்படுத்துவதாகும்? தேவதாசி முறை ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் எல்லாம் மனிதனை மேம்படுத்தவே! இது யாரையேனும் காயப்படுத்துவதாக இருப்பின் திருந்த வேண்டியவர்கள் அவர்களே தவிர வேறல்ல. உலகம் தட்டையல்ல உருண்டை; பூமியை சூரியன் சுற்றவில்லை சூரி யனைத்தான் பூமி சுற்றுகிறது ; உடலில் இரத்த ஓட்டம் உள்ளது; உடலில் எலும்புகள் இத்தனை; சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது, சூரியனின் பிரதி பலிப்பே; இப்படி எந்த அறிவியல் உண்மையைச் சொல்லும் போதும் அது மத நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தது; அதனால் பலர் தண்டிக்கப்பட்டனர். மத நம்பிக்கை காயப்படுகிறது என உலகம் இந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் விட்டிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் (சமூக வலைத் தளத்தில் உரையாடும் வசதி உட்பட) இல்லாமல் போயிருக்குமே!
மனித குல வளர்ச்சிக்கு முன்னேற் றத்துக்கு வளவாழ்வுக்கு எதிராக இருக்கும் தவறான பழக்க வழக்கங்களை அறிவியல் நோக்கில் சுட்டிக் காட்டுவது எப்படி காயப்படுத்துவதாகும்? மாறாக அறிவியலின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் ரீதியான கேள்விகளை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? ஆத்திகம் ஒரு சாரார் உரிமை எனில், நாத்திகம் இன் னொரு சாரார் உரிமை. இதை ஏற்க மறுப்பது ஏன்? இந்தியச் சிந்தனை மரபு முழுவதும் ஆத்திகருடையது என்பது விவரம் தெரியாதவர்கள் கூற்றே! இன்னும் சொல்லப் போனால் லோகாயவாதம் எனப்படுகிற பொருள்முதல்வாத மரபு வலிமையானது . தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூல்களில் இதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன . குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த இந்திய நாத்திகம் எனும் நூல் உரக்கப் பேசும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் சாடிச்சாடி கேள்வி கேட்டு கேள்வி கேட்டு பெறப் பட்ட முன்னேற்றம்தான் ; நாத்திகரும் ஆத்திகரும் - அனைவரும் அனுபவிக் கும் அனைத்துமாகும். இந்திய தத்துவ மரபில் விவாதம் முக்கியமானது . அதில் சாமான்ய சள என்றொரு வகை உண்டு . அதனை தத்துவஞானிகள் ஏற்பதில்லை.
ஏனெனில் சாமன்ய சள என்பது விவாதத்தின் மையத்தை விட்டுவிட்டு குதர்க்கமாக குறுக்குசால் ஓட்டுவதாகும். இந்த குயுக்தியை அவர்கள் நிராகரிப்பர். மேலே கேட்ட கேள்விகள் அத்தகைய சாமான்ய சளதான். ஆயினும் குழப்பம் நீக்கிட பதில் சொல்லவேண்டியது கட் டாயமாகிவிட்ட்து. எல்லா விமர் சனங்களுக்கும் முதன்மையானது மதங்களைப் பற்றிய விமர்சனமே என்பது மார்க்சிஸ்ட்கள் உறுதியான முடிபு; அதே நேரம் மார்க்சிய விமர்சனம் வசைபாடுவதோ அவதூறு பொழிவதோ அல்ல, சமூக அறிவியல் நோக்கில் பகுத்தாய்வதே ஆகும். அதனைத் தொடர்ந்து செய்வோம். யாரையும் காயப்படுத்த அல்ல; விழிப் புணர்வுக்காக சமூக சமத்துவத்துக்காக சமூக நீதிக்காக சமூக முன்னேற்றத் துக்காக.
---------------- சு.பொ.அகத்தியலிங்கம்(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)

Comments

Popular posts from this blog

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...