தூத்துக்குடியில் சுமார் 20,30 சுவர்களில் 'இராமசாமிக் கழுதைக்கு செருப்படி' என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் 'இராமசாமிக் கழுதை செத்துவிட்டது' என்றும் 'இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி' என்றும் எழுதி இருந்தது.
'இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும்' என்று எழுதியிருந்த்தைப் பார்த்து சந்தோசப்பட்டிருந்தேயானால் , "இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது" என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, "இராமசாமி மனைவி கற்புக்கரசி" என்று எழுதியிருந்த்தை பார்த்து மகிழ்ச்சியடைந்து , மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன்பெற்று இருந்தால் "இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி" என்பதற்கு நான் வருத்தப்படனும்.
ஆகவே அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை."-
தந்தை பெரியார்.
Comments
Post a Comment