Skip to main content

‪#‎பெரியார்_ஏன்_72_வயதில்_திருமணம்_செய்தார்‬

சில அரவேக்காட்டு பதர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!
1948 ஆண்டு பெரும் செல்வந்தரான அந்த கிழவனுக்கு வயது 72. முதுமைக்கே உண்டான நோய்கள் ஒருபுறம், தன் போராடி வரும் மக்களின் மேம்பாட்டு பற்றிய சிந்தனை ஒருபுறம், அதற்காக உருவாக்க பட்ட கழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை ஒருபுறம், தனது மரணத்திற்கு பின் செத்துக்களை அனுபவிக்க காத்து கிடக்கும் கூட்டம் மறுபுறம் என அவரின் சிந்தனைகள் படபடத்து கொண்டிருக்கிறது.
மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில் மருத்துவரோ ஜாடையாக உடலை கவனித்து கொல்ல கூறுவதை அந்த கிழவனால் ஊகித்து கொல்ல முடிகிறது. முதலில் தன் சொத்துக்களை மக்களுக்கு அதாவது கழகத்திற்கு எழுதி வைத்து விட தீர்மானிக்கிறார். தனது சட்ட ஆலோசகர்கள் வந்துவிட்டார்கள். தீராத வயிற்று வலி, நிற்காத முத்திரம் என வேதனைகளை புறம்தள்ளி விட்டு தொடங்குகிறார்.
எனது சொத்துக்கள் பல கோடிகள் உள்ளது. அதை வைத்து என்னால் உயிரை நீட்டித்து கொல்லவும் முடியாது. நாளை நான் கண் விழிப்பேனா என்றால் அதை என் மருத்துவர் தான் சொல்ல வேண்டும். ஆதலால் என் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க முடிவு செய்து விட்டேன். அதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து தாருங்கள். எங்கு கையொப்பம் இட வேண்டுமோ அங்கே கையொப்பம் இடுகிறேன். இதை உடனடியாக செய்தாக வேண்டும் என்று தன் வயிற்றில் கையை வைத்து தன் வலியை கட்டுபடுத்த முயன்று கொண்டே கட்டளை இடுகிறார் அந்த கிழவர்.
கிழவனின் உடல்நிலையை அறிந்த சட்ட ஆலோசகர்களோ தயக்கத்துடன், ஐயா! உங்கள் சொத்துக்கள் சட்டபடி உங்கள் வாரிசுகளுக்கே போகும். அதை நீங்கள் மாற்றி வேறு ஒருவருக்கு எழுதவேண்டுமானால் அதற்கு உங்கள் வாரிசின் சம்மதமும் கையொப்பமும் வேண்டும் என்ற சட்ட சரத்தை கூறுகிறார்கள்.
இளம் வயதில் தன் மனைவியை பறிகொடுத்த அந்த கிழவன், இறந்து பிறந்த குழந்தைகள் என தற்சமயம் வாரிசுகள் யாரும் இல்லை அவருக்கு. ஆதலால் தனது சொத்துக்கள் தன் சகோதரர் குடும்பத்தினருக்கு தான் சேரும் என்றனர் சட்ட ஆலோசகர்கள். உடனே தன் சகோதரரை நாடுகிறார் அவர். சகோதரரோ சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க உடன்படவில்லை.
யாருக்கு தான் அன்றைய கால மதிப்பில் பல கோடிகளை தானம் செய்ய மனம் வரும்.
மீண்டும் சட்ட ஆலோசகர்கள் கூட்டப்படுகிறார்கள். மாற்று வழிகளை ஆராய்கிறார்கள்.
72 வயது முதியவருக்கு இருந்த ஒரே வழி ஒரு வாரிசை உருவாக்க வேண்டும்! எப்படி என்பது தான் சிக்கல். குழந்தைகளையோ இல்லை பெரியவர்களையோ தத்து எடுத்து வாரிசு ஆக்க சட்டம் அனுமதிக்க வில்லை. அப்படியானால் ஒரே வழி திருமணம் மட்டுமே!
முடியாது என்கிறார் அவர்!. சரி திருமணம் தான் வழி என்றால் எப்படி 70 வயது முதியவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வர்?
அன்றைய காலத்தில் பெண்களுக்குகான திருமணம வயதோ 13. எப்படி சாத்தியம். முடியாது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கிறார் அந்த முதியவர்.
இதை முவதுமாக பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரின் 32 வயது திருமணமாகாத பணிப்பெண் முன் வந்தார்.
சட்டத்திற்காக தானே திருமணம். எப்படியும் நான் இந்த முதியவருடன் முழு நேரமும் இருந்து பணியாற்றி வருகிறேன். முதியவரின் உடல்நிலை கருதியும் அவரின் நல்ல நோக்கத்திற்காகவும் இதை நானே செய்கிறேன் என்கிறார்.
சட்ட வல்லுநர்களோ இதை விட்டால் வழி இல்லை என்கிறார்கள். உடன் இருப்பவர்களில் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் தனது சொத்துக்கள் குடும்பத்தினருக்கு போவதில் உடன்பாடு இல்லை. உடல்நிலையோ அவர் கையில் இல்லை.
தீர்க்கமான சிந்தனைக்கு பின் இசைகிறார். 1949ஆம் ஆண்டுஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் அந்த திருமணம் நடக்கிறது. உடன்பாடு இல்லாதவர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தன் சமுதாயத்திற்காக எழுதி வைத்த நிம்மதியோடு தன் வயிற்றில் உண்டாகும் வலியை மறந்து பெருமூச்சு விடுகிறார் அந்த கிழவர்.
யார் அந்த கிழவர்? ஆம் அவரே தான்... நம் பெரியார் ஈ. வெ. இராமசாமி –
பணிப்பெண் பெயரோ ‪#‎மணியம்மை‬.
-தோழர் Naga Strom Baskaran

Comments

Popular posts from this blog

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...