தலைவர் சொன்னதும் - முடிவு தெரிந்ததும்!.........................
“பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம்.
ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் ஒரு தலைமுறை தப்பித் தவறிப் படித்துத் தலையெடுக்கத் தலைப்பட்டது என்றவுடன், அதற்கு மரண அடி கொடுத்துத் தரைக்குள் புதைக்க ஆரியம் சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது!'' (‘விடுதலை’, 4.8.2016).
‘‘மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெறுதல் வேண்டும். அய்.அய்.டி.,களில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பு மதிப் பெண்ணைக் கணக்கில் எடுக்காமல், தனியே நுழைவுத் தேர்வு எழுதிட வைப்பது நமது ஒடுக்கப்பட்ட மற்றும் கிராமங்களிலிருந்து வந்து சேர விரும்பும் பிள்ளைகளை அனுமதிக்காது தடுக்கும் சூழ்ச்சியையும் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வருதலும் அவசர அவசியமாகும்'' (‘விடுதலை’, 10.8.2016).
திராவிடர் கழகத் தலைவர் சில நாள்களுக்கு முன் தெரிவித்த கருத்துகள் இவை.
இதோ, இப்பொழுது வெளிவந்த தகவல் என்ன தெரியுமா?
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் முதல் இடத்திலும், அகில இந்தியாவில் 141 ஆவது இடத்திலும் தகுதி பெற்றுள்ள அக்ஷய் குமாரின் பின்னணி என்ன? அப்பா டாக்டர், அம்மா டாக்டர், மேலும் பையன் தொடக்க முதல் படித்தது சி.பி.எஸ்.இ. பள்ளியில்.
இதைத்தான் தமிழர் தலைவர் சொன்னார் - நீட் தேர்வு என்பது படித்த மேல் தட்டு மக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் சாதகமானது என்று. அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது! சமூகநீதிக்கு எதிரானது ‘நீட்’ என்பதற்கு இன்னுமா ஆதாரம் தேவை?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்காம்?
Comments
Post a Comment