Skip to main content

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி .
இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார்.
அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன்.
வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் .
"ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் .
ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் .
எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.
மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா அப்படி என்ன நடந்தது என்று தேவலோக ஞானிகளையும் அழைத்து கேட்கிறார்.
அந்த ஆலோசனை சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் கூறினார்.
" ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாயு .அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளையின் அகால மரணம் ஏற்பட்டுள்ளது என்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம் ".
மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர் கூறினார் .
" சூத்திரர்கள் யாரேனும் வேதம் தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் . சூத்திரர்கள் கற்பதும் தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும் .. இந்த யுகத்தில் நடக்காது . அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது .அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும் "என்றார் நாரதர்.
உடனே தன் வில் அம்பு வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டு விடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான் .
கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் சரயு நதிக் கரையில் வியக்கத்தக்க தேஜஸுடன் ஒருவர் தலைகீழாக நின்று உக்ர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விமானத்தை இறக்கி அவர்.அருகில் சென்று
" தவசிரேஷ்டரே நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள் ?" என்று கேட்க
தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார் .
"என் பெயர் சம்புகன் . நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன் ." நீங்கள் யார் ?
என்று கேட்கிறார் சம்புகன் .
நான் ஸ்ரீ ராமச்சந்திரன் . இத்தவம் செய்யும் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் ? பிரா மணரா அல்லது ஷத்திரியரா ? வைசியரா இல்லை சூத்திரரா சொல்லுங்கள் என்று கேட்க ,
சம்புகன் கூறினார் ஸ்ரீ ராமச்சந்திர பிரபு நான் உம்மைக் கண்டது என் பேறு .
நான் " சூத்திர யோனியில் பிறந்தவன் "
என்றார் சம்புகன்.
அதைக்கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது ராமன்
" அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும் ""
என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினான் .
சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்த உடன் வானுலகில் இருநது தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர் .
அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான் .
அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார் .
இவ்வாறாக ஸ்ரீ இராமர் தனது ஆட்சியில் தர்மத்தை நிலை நாட்டினார்.
இதுவே சம்புகன் கதை .!!
                                                                            நன்றி :- தோழர்  அருள்மொழி 

Comments

  1. இராமயாணத்தை எழுதிய வால்மீகி ஒரு பழம் குடியினர் மரபைச்சார்ந்தவர்.திருடனாகவும் இருந்தவர்.அவர் தன் தலைவனை எப்படிப்படைத்தார்.
    பழங்குடியினத்தலைவரான குகனை சகோதரனாக ஏற்றவன் ராமன்.
    அரக்கனான வீபீடணனை சகோதரனாக ஏற்றவன் ராமன்.
    குரங்கான சுக்கிரிவனை நண்பனாக ஏற்றவன் ராமன்.
    பறவையான ஜடாயுவுக்கு மகனாக இறுதிக்கடன் செய்தவன் ராமன்.
    இந்தப் பிறவியில் இன்னொரு மாதரை சிந்தையாலும் தொடாதவன் ராமன்.
    ஒருவனுக்கு ஒருத்தி என் உயரிய தன்மையை உலகுக்கு சொன்னவன் ராமன்.
    தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என வாழ்ந்தவன் ராமன்.
    அரசு கிடைத்த போதும் அரசு இல்லை;காட்டிற்கு செல் என் கட்டளையிட்ட போதும் ஒரே இன்முகத்தோடு இருந்தவன் ராமன்.
    ஒரு சொல்; ஒரு இல்; ஒரு வில் என வாழ்ந்தவன் ராமன்.

    ReplyDelete
  2. இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறான். அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்-பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடன் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறித் தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக்களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர-காண்டம், சரகம் 43, சுலோகம் 1) இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனு-பவித்த களியாட்டங்களை வால்மீகியும், மிக விசாலமாகவே விவரிக்கிறான். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்குதான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன. மது, மாமிசம், பழவகைகள் அனைத்தும் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாத-வன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் போடும் கூத்தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான். (உத்தரகாண்டம்:சரகம் 42. சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறான். அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமான-தல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்-தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளி-லிருந்தும் பெண்ணழகிகள் எல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இப்படிப் பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்கள் எல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு-பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம், வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறான் வால்மீகி. இவைகளெல்லாம் இராமனின் ஒரு நாள் நிகழ்ச்சிகளே அல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளே இவை-களாகும். நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒரு போதும் கடைபிடிக்கவில்லை. தம்மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்-பத்தைக் குறிப்பிடுகிறான். அதுவும் ஒரு துயர-மான நிகழ்ச்சியாய்த் தெரிகிறது. அக்குறையைத் தாமே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படிச் செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

    ReplyDelete
  3. உத்தர காண்டம் இடைச்செறுகல்:::

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...