இஸ்ரோவின் “ஸ்கிரேம்ஜெட்" சோதனை வெற்றிக்கு பாராட்டு ! விண்வெளி விமானத்தில் ஸ்கிரேம்ஜெட் என்ஜினைப் பயன்படுத்தும் போது, இப்போது இந்தியா விலிருந்து 18 மணி நேரம் பயணித்து செல்லக் கூடிய அமெரிக்காவுக்கு, ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும் என்றும் சிவன் கூறியிருக்கிறார். முக்கியமான இந்த வெற்றிக்கும், சிறப்பான ஆராய்ச்சிக்கும் காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் தி.மு. கழகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மற்றொரு மைல் கல் சாதனையாக - காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி, திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் நவீன ராக்கெட் எஞ்சின் பரிசோதனை நேற்றையதினம் (28-8-2016) வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. “ஸ்கிரேம்ஜெட்"" என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்பு முனை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். திருவனந்தபுரம் விக்ரம் சாராப...