ஊளையிட்ட நரிகள் எங்கே பதுங்கின? 5.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையை இலக்காக வைத்த மோடி அரசுக்கு கிடைத்தது 65,789 கோடிதான். இதன்மூலம் அரசுக்கு மூன்றேமுக்கால் லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே? 2016-17 ஆம் ஆண்டிற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பல்வேறு மூடநம்பிக்கைகளின் காரணமாக அரசே தேதியைத் தள்ளிப்போட்டு வந்தது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய தசமியன்று விஜய முகூர்த்த்தில் துவங்கப்பட்டது. 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக் கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,341 கோடியாகவும், 800 மெகாஹெர்ட்சுக்கு ரூ.5,819 கோடியாகவும், 2,00 மெகாஹெர்ட்சுக்கு ரூ.2,100 கோடி யாகவும், 700 மெகாஹெர்ட்சுக்கு ரூ.11,485 கோடியாகவும், 2,300 மெகாஹெர்ட்சு மற்றும் 2,500 மெகாஹெர்ட்சு அலைவரிசை அலைக்கற்றைக்கு தலா ரூ.817 கோடி யாகவும் அடிப்படை ஏலத் தொகை நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மொத்தம் 2354.55 மெகா ஹெர்ட்சு செல்போன் அலைவரிசைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் ஏலம் ...