Skip to main content

2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே

ஊளையிட்ட நரிகள் எங்கே பதுங்கின?
5.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையை இலக்காக வைத்த மோடி அரசுக்கு கிடைத்தது 65,789 கோடிதான். இதன்மூலம் அரசுக்கு மூன்றேமுக்கால் லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே?
2016-17 ஆம் ஆண்டிற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பல்வேறு மூடநம்பிக்கைகளின் காரணமாக அரசே தேதியைத் தள்ளிப்போட்டு வந்தது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய தசமியன்று விஜய முகூர்த்த்தில் துவங்கப்பட்டது.
1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக் கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,341 கோடியாகவும், 800 மெகாஹெர்ட்சுக்கு ரூ.5,819 கோடியாகவும், 2,00 மெகாஹெர்ட்சுக்கு ரூ.2,100 கோடி யாகவும், 700 மெகாஹெர்ட்சுக்கு ரூ.11,485 கோடியாகவும், 2,300 மெகாஹெர்ட்சு மற்றும் 2,500 மெகாஹெர்ட்சு அலைவரிசை அலைக்கற்றைக்கு தலா ரூ.817 கோடி யாகவும் அடிப்படை ஏலத் தொகை நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மொத்தம் 2354.55 மெகா ஹெர்ட்சு செல்போன் அலைவரிசைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், அய்டியா செல்லுலர் மற்றும் பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் அலைக்கற்றை ஏலத் துக்கான போட்டியில் கலந்து கொண்டன.
இந்த ஏலத்தின் மூலமாக, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருந்தொகையாக 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவோம் என்று கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அருண் ஜெட்லி அறிவித்தார். மோடியும் தனது பொதுக்கூட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கோடிகளை அரசு லாபமாகப் பெறும் என்று கூறிக்கொண்டு இருந்தார்.
ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த தொகையில் ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து ஏலத் தொகையைக் குறைத்து ஏலம் விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
மத்திய அரசுக்கு, வெறும் 67 ஆயிரம் கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது; இது மிகபெரும் இழப்பாகும். அரசு நிர்ணயித்த இலக்கைவிட பல மடங்கு குறைவாக விலைக்குப் போனது. இதனால் அரசுக்கும் 3,75,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. யுபிஏ அரசின் காலத்திலும் இதே போன்ற இழப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த இழப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பெயர் சூட்டிய அப்போது எதிர்கட்சியாக இருந்த இதே பாஜக தற்போது ஆளும் கட்சியாக உள்ளது, இம்முறை ஏற்பட்ட இழப்பும் ஊழலாகவே கருதப்படுமா?
மத்திய அரசுக்குக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு குறித்து கருத்து தெரிவித்த தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஜே.எஸ்.மிஸ்ரா கூறியதாவது, “மத்திய அரசு மிகப் பெரிய அளவில் மிகச் சிறந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்பனை செய்கிறது. அதனால் விலை அதிகமாக நிர்ணயிக்கவேண்டியுள்ளது. ஏலம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் கலந்து கொண்டன’’ என்று கூறினார். “இருப்பினும் நாங்கள் திட்டமிட்டபடி வருவாய் இலக்கை அடையமுடியவில்லை;மிகப்பெரிய அளவில் தற்போதுதான் அலைவரிசை ஏலம் விடப்படுகிறது. இந்த அலைவரிசை மூலம் தொலைத் தொடர்பு சேவை மேம்படுவதுடன், தொலைத் தொடர்பு சேவை இடை இடையே பாதிக்கும் பிரச்சினைகளும் இருக்காது’’ என்றும் கூறினார்.
ஏலத் தொகை பற்றி அய்டியா செல்லுலார் நிறு வனத்தின் நிதி ஆலோசகர் அக்ஷயா முந்திரா கருத்து தெரிவித்தபோது “ஏலத்தொகை மிகவும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஏலம் கேட்க உரிமை கோரிய நிறுவனங்கள் மீண்டும் தங்களது பொருளாதார ஆலோசனைக்குழுவைக் கூட்டி முடிவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் ஏலத்திலிருந்து விலக நேரிடும் சூழல் உருவாகிறது. ஏலத்தொகையை உயர்த்தியதன் மூலம் சில நிறுவனங்கள் லாபம் பெறும்; அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட முடியாது’’ என்று கூறினார்.
அரசுக்கு ஏற்பட்ட இந்தப் பெரிய அளவிலான இழப்பு குறித்து தொலைத்தொடர்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்தாவது, “மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டது, பொதுவாக ஏலத்தொகை அதிகம் நிர்ணயிக்கும்போது பல்வேறு நிறுவனங்கள் துவக்கக் கட்ட ஏலத்திலேயே வெளியேறிவிடுகின்றன. இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி அரசு தனக்குசாதகமான நிறுவனத்திற்கு ஏலம் கொடுத்து விடுகிறது’’ என்று தெரிவித்தனர்.
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இலட்சியமெல்லாம் தனியார் தொப் பையை வளர்ப்பதே!
2ஜி ஊழல் என்று ஊளையிட்ட நரிகள் இ
கலி. பூங்குன்றன்
ப்பொழுது எங்கே பதுங்கினவாம்?

Comments

Popular posts from this blog

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...