Skip to main content

Posts

Showing posts from 2018

அய்யப்பன் எப்படி பிறந்தான் என்பதை பார்ப்போம்...

அதாவது பத்மாசூரன் என்று ஒரு அரசன் சிவனை  நோக்கி கடும் தவம் செய்தான்... இதனை கேள்விப்பட்ட சிவன் மனமிறங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றான் உடனே அந்த அசுரன் நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரம் கேட்டான் இதனை ஏற்றுக்கொண்ட சிவன் அவனுக்கு வரம் கொடுத்தான்... அசுரனுக்கு ஒரு சந்தேகம் சிவன் கொடுத்த வரம் உண்மையானதா? என்று யோசித்து.... சிவன் தலையில் கைவைக்க அருகில் சென்றான் உடனே இதை தெரிந்த அந்த சிவன் பயத்தில் ஓடினான் ஓடினான் ஓடி கொண்டே விஷ்னுவிடம் சென்றடைந்தான்... உடனே நடந்ததை விஷ்னுவிடம் சொன்னான்... உடனே அதற்கு அந்த விஷ்னு நீ ஒன்னும் பயப்பபடாதே நான் அவனை அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.. உடனே விஷ்னு பெண் வேடத்தில் சென்று அந்த அசுரனின் எதிரே நின்றான்... இந்த அழகான பெண்னை பார்த்ததும் அந்த அசுரன் அந்த பெண்னை கட்டி அணைக்க ஆசைப்பட்டான்.... உடனே அந்த பெண்விஷ்ணு அந்த அசுரனை பார்த்து நீ என்னை கட்டி அனைக்க வேண்டுமென்றால் ஒரு சின்ன Condition... அதாவது நீ அருகில் உள்ள நீர் நிலையில்( பம்பை நதி )இறங்கி குளித்து விட்டு வா என்று கூறினான்.. உடனே அ...

தையே தமிழர் புத்தாண்டு:

தையே தமிழர் புத்தாண்டு: ஆளுநர் ஆய்வு தொல்காப்பியத்திலுமா? - சுப.வீரபாண்டியன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளையும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித ் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களையும் தங்களின் உரைகளில் மேற்கோள் காட்டுவது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பிரதமர் குறிப்பிட்ட குறள் எது என்பதைக் கண்டறியத் தமிழறிஞர்கள் பலராலும் கூட முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, திருக்குறள் பற்றி அவருக்குப் பேசத் தோன்றியதே என எண்ணி நாம் மகிழ்கின்றோம். இப்போது தன் பங்கிற்குத் தமிழ்நாட்டின் ஆளுநர் தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார். மராத்தியத்தில் பிறந்த அவர், தொல்காப்பியத்தில் ஆராய்ச்சி செய்து நம் புத்தாண்டைக் கண்டுபிடித்திருக்கிறார். அடடா! அவர் ஆய்வு நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. தொல்காப்பியத்தில் ஓர் ஆண்டை ஆறு கால நிலைகளாகப் பிரித்து, அதில் சித்திரை மாதமே இளவேனிற்காலத்தில் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார். தமிழர்கள் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகவும், ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர...

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: தமிழ் வளர்ச்சிக்கு தந்தை பெரியாரின் பணிகள்

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: தமிழ் வளர்ச்சிக்கு தந்தை பெரியாரின் பணிகள் : பெரியாரின் தமிழ்த் தொண்டு மஞ்சை வசந்தன்   தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன ? அது எதற்காகப் பயன்படுகிறது ? ஒரு...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...

கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை.: தீபாவளியை முன்னிட்டு நரகாசுரன் சிறப்பு மலர் 16 பக்...

கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை.: தீபாவளியை முன்னிட்டு நரகாசுரன் சிறப்பு மலர் 16 பக்... : நண்பர் ஒருவர் கீழ்கண்டவாறு இந்த மலரை வெளியிடும் நாத்திகர்களை பற்றி கீழ்க்கண்டவாறு சொன்னார். நரகாசுரனின் பிறப்பால் தமிழனென்றும் , அவனுக்கு மல...

கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை.: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்! ஓர் அபாரமான கற...

கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை.: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்! ஓர் அபாரமான கற... : நாவில் பிழை இருந்தால் ஒழிய தேன் கசக்காது! வேம்பு இனிக்காது! பிறவியில் மாற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது! அதுபோலத்தான் பார்ப்பனர்கள...

கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை.: என்னைப் பற்றி.... தந்தை பெரியார்

மக்களை அறிவாளியாக்கும், துறையில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடுபட்டாலும் அவர்கள் பொது மக்களால் வெறுக்கப்-படவும், நாத்திகர்கள் என்று கூறப்-படவும், தொல்லைக்கு ஆளாக்கப்-படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம் நாட்-டில், நம் மக்கள் இருக்கும் யோக்கி-யதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? அதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்துத் தொண்டாற்றி வருகிறேன். இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்-திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத்தாராலோ, அரசாங்கத்தில் உள்ள மேல் ஜாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலோ எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தா-பனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று இன்கம் டாக்ஸ் வரி (வருமான-வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன் நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போல் இன்கம்டாக்சும் போடப்ப...