அதாவது பத்மாசூரன் என்று ஒரு அரசன் சிவனை நோக்கி கடும் தவம் செய்தான்... இதனை கேள்விப்பட்ட சிவன் மனமிறங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றான் உடனே அந்த அசுரன் நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரம் கேட்டான் இதனை ஏற்றுக்கொண்ட சிவன் அவனுக்கு வரம் கொடுத்தான்... அசுரனுக்கு ஒரு சந்தேகம் சிவன் கொடுத்த வரம் உண்மையானதா? என்று யோசித்து.... சிவன் தலையில் கைவைக்க அருகில் சென்றான் உடனே இதை தெரிந்த அந்த சிவன் பயத்தில் ஓடினான் ஓடினான் ஓடி கொண்டே விஷ்னுவிடம் சென்றடைந்தான்... உடனே நடந்ததை விஷ்னுவிடம் சொன்னான்... உடனே அதற்கு அந்த விஷ்னு நீ ஒன்னும் பயப்பபடாதே நான் அவனை அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.. உடனே விஷ்னு பெண் வேடத்தில் சென்று அந்த அசுரனின் எதிரே நின்றான்... இந்த அழகான பெண்னை பார்த்ததும் அந்த அசுரன் அந்த பெண்னை கட்டி அணைக்க ஆசைப்பட்டான்.... உடனே அந்த பெண்விஷ்ணு அந்த அசுரனை பார்த்து நீ என்னை கட்டி அனைக்க வேண்டுமென்றால் ஒரு சின்ன Condition... அதாவது நீ அருகில் உள்ள நீர் நிலையில்( பம்பை நதி )இறங்கி குளித்து விட்டு வா என்று கூறினான்.. உடனே அ...
தையே தமிழர் புத்தாண்டு: ஆளுநர் ஆய்வு தொல்காப்பியத்திலுமா? - சுப.வீரபாண்டியன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளையும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித ் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களையும் தங்களின் உரைகளில் மேற்கோள் காட்டுவது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பிரதமர் குறிப்பிட்ட குறள் எது என்பதைக் கண்டறியத் தமிழறிஞர்கள் பலராலும் கூட முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, திருக்குறள் பற்றி அவருக்குப் பேசத் தோன்றியதே என எண்ணி நாம் மகிழ்கின்றோம். இப்போது தன் பங்கிற்குத் தமிழ்நாட்டின் ஆளுநர் தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார். மராத்தியத்தில் பிறந்த அவர், தொல்காப்பியத்தில் ஆராய்ச்சி செய்து நம் புத்தாண்டைக் கண்டுபிடித்திருக்கிறார். அடடா! அவர் ஆய்வு நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. தொல்காப்பியத்தில் ஓர் ஆண்டை ஆறு கால நிலைகளாகப் பிரித்து, அதில் சித்திரை மாதமே இளவேனிற்காலத்தில் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார். தமிழர்கள் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகவும், ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர...