சைவர்கள் மகாசிவராத்திரி கொண்டாடினால், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடு வார்கள். இந்த இரண்டு அமைப்பினரும் முதன்மைப்படுத்தும் கடவுள்களின் கதைகளோ புராணங்கள்படி ஆபாச - கழிசடைத்தனம் வழியும் இந்து மகாக்கடல் என்றுதான் சொல்லவேண்டும். சிவராத்திரியன்று பட்டினிக் கிடந்தால் எல்லாப் பாவங்களும் நீக்கப்பட்டு சிவலோக பதவி அடைந்து விடுவார்களாம். அதேபோல, வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால் உடனே அவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்துவிடும் - அக்கோவில்களில் சொர்க்கவாசல் நுழைவதற்கென்றே தனித்த ஏற்பாடுகளும் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி சொர்க்க வாசலில் நுழைந்தவர்கள் திரும்பி அவரவர் கள் வீட்டுக்குத்தான் வருகிறார்கள். எல்லாம் பிள்ளை விளையாட்டே! இதோ ஒரு எடுத்துக்காட்டு: ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும், ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில...