சாத்தான் மிக பெரியவன் வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது. பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது. அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல். முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி. வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார். செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்.. அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்.. தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்...