Skip to main content

Posts

Showing posts from October, 2016

'தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்''

''தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்'' தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50-ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. "மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்...